தொடக்கம் |
|
|
1. | அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்,-இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து. | |
|
உரை
|
|
|
|
|
2. | தம் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர் இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின் நான்மறையாளர் வழிச் செலவும்,-இம் மூன்றும் மேல் முறையாளர் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
3. | கல்லார்க்கு இனனா ஒழுகலும், காழ்க் கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும்,-இம் மூன்றும் அறியாமையான் வரும் கேடு. | |
|
உரை
|
|
|
|
|
4. | பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கோடலும்,-இம் மூன்றும் சாவ உறுவான் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
5. | வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும்,-இம் மூன்றும் அருந் துயரம் காட்டும் நெறி. | |
|
உரை
|
|
|
|
|
6. | பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார் திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும்,-இம் மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு. | |
|
உரை
|
|
|
|
|
7. | வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின் அஞ்சுவான் கற்ற அரு நூலும்,-இம் மூன்றும் துஞ்சு ஊமன் கண்ட கனா. | |
|
உரை
|
|
|
|
|
8. | தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும்,-இம் மூன்றும் தாம் தம்மைக் கூறாப் பொருள். | |
|
உரை
|
|
|
|
|
9. | பெருமை உடையார் இனத்தின் அகறல், உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல், விழுமிய அல்ல துணிதல்,-இம் மூன்றும் முழுமக்கள் காதலவை. | |
|
உரை
|
|
|
|
|
10. | கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும் மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத் தன்மையிலாளர் அயல் இருப்பும்,-இம் மூன்றும் நன்மை பயத்தல் இல. | |
|
உரை
|
|
|
|