தொடக்கம் |
|
|
11. | விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக் களியாதான் காவாது உரையும், தெளியாதான் கூரையுள் பல் காலும் சேறலும்,-இம் மூன்றும் ஊர் எலாம் நோவது உடைத்து. | |
|
உரை
|
|
|
|
|
12. | தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்; வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்; கோளாளன் என்பான் மறவாதான்;-இம் மூவர் கேள் ஆக வாழ்தல் இனிது. | |
|
உரை
|
|
|
|
|
13. | சீலம் அறிவான் இளங்கிளை; சாலக் குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றி மாண்ட குணத்தான் தவசி;-என மூவர் யாண்டும் பெறற்கு அரியார். | |
|
உரை
|
|
|
|
|
14. | இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும் செறுவோடு நிற்கும், சிறுமை;-இம் மூன்றும் குறுகார், அறிவுடையார். | |
|
உரை
|
|
|
|
|
15. | பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்து தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால் ஒட்டி வினை நலம் பார்ப்பானும்,-இம் மூவர் நட்கப் படாஅதவர். | |
|
உரை
|
|
|
|
|
16. | மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப் பெண்ணினுள் கற்புடையாள்-பெற்றானும், உண்ணு நீர்க் கூவல் குறை இன்றித் தொட்டானும்,-இம் மூவர் சாவா உடம்பு எய்தினார். | |
|
உரை
|
|
|
|
|
17. | மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள் சொல் வென்றி வேண்டும் இலிங்கியும்,-இம் மூவர் கல்விப் புணை கைவிட்டார். | |
|
உரை
|
|
|
|
|
18. | ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும்,-இம் மூன்றும் கள்வரின் அஞ்சப்படும். | |
|
உரை
|
|
|
|
|
19. | கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில் பிறன் கடை நின்று ஒழுகுவானும், மறம் தெரியாது ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும்,-இம் மூவர், நாடுங்கால், தூங்குபவர். | |
|
உரை
|
|
|
|
|
20. | ஆசை பிறன்கண் படுதலும், பாசம் பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன் கல்லான் என்று எள்ளப்படுதலும்,-இம் மூன்றும் எல்லார்க்கும் இன்னாதன. | |
|
உரை
|
|
|
|