தொடக்கம் |
|
|
21. | வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச் செய்தமை நாடாச் சிறப்புடைமை, எய்தப் பல நாடி நல்லவை கற்றல்,-இம் மூன்றும் நல மாட்சி நல்லவர் கோள். | |
|
உரை
|
|
|
|
|
22. | பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும் பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப் பொய்த்துரை என்னும் புகை இருளும்,-இம் மூன்றும் வித்து; அற, வீடும் பிறப்பு. | |
|
உரை
|
|
|
|
|
23. | தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால் குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப் பல் பொருள் நீங்கிய சிந்தையும்,-இம் மூன்றும் நல் வினை ஆர்க்கும் கயிறு. | |
|
உரை
|
|
|
|
|
24. | காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும், தூண்டிலினுள் பொதிந்த தேரையும், மாண்ட சீர், காழ்த்த பகைவர் வணக்கமும்,-இம் மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும், அளறு. | |
|
உரை
|
|
|
|
|
25. | செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு வைத்த அறப்புறம் கொண்டானும்,-இம் மூவர் கைத்து உண்ணார், கற்றறிந்தார். | |
|
உரை
|
|
|
|
|
26. | ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக் கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின் சீலம் இனிது உடைய ஆசானும்,-இம் மூவர் ஞாலம் எனப் படுவார். | |
|
உரை
|
|
|
|
|
27. | உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதலும், தோல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை,-இம் மூன்றும் தூஉயம் என்பார் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
28. | வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும் இல்லது காமுற்று இருப்பானும், கல்விச் செவிக் குற்றம் பார்த்திருப்பானும்,-இம் மூவர் உமிக் குற்றுக் கை வருந்துவார். | |
|
உரை
|
|
|
|
|
29. | பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குன்றாமை; கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை; மண் விழைந்து, வாழ் நாள் மதியாமை;-இம் மூன்றும் நுண் விழைந்த நூலவர் நோக்கு. | |
|
உரை
|
|
|
|
|
30. | தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும், மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும், என்றும் அழுக்காறு இகந்தானும்,-இம் மூவர் நின்ற புகழ் உடையார். | |
|
உரை
|
|
|
|