தொடக்கம் |
|
|
31. | பல்லவையுள் நல்லவை கற்றலும்; பாத்து உண்டு ஆங்கு இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின் தாளின் ஒரு பொருள் ஆக்கலும்,-இம் மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை. | |
|
உரை
|
|
|
|
|
32. | நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச் சிற்றினம் அல்லார்கண் சொல்லலும்,-இம் மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். | |
|
உரை
|
|
|
|
|
33. | கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின் கடை மணிபோல் திண்ணியான் காப்பும்,-இம் மூன்றும் படை வேந்தன் பற்று விடல்! | |
|
உரை
|
|
|
|
|
34. | மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து முறை நிலை கோடா அரசும், சிறைநின்று அலவலை அல்லாக் குடியும்,-இம் மூவர் உலகம் எனப்படுவார். | |
|
உரை
|
|
|
|
|
35. | முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும், நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும், மைந் நீர்மை இன்றி மயல் அறுப்பான்,-இம் மூவர் மெய்ந் நீர்மைமேல் நிற்பவர். | |
|
உரை
|
|
|
|
|
36. | ஊன் உண்டு, ‘உயிர்கட்கு அருளுடையெம்!’ என்பானும், ‘தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்’ என்பானும், காமுறு வேள்வியில் கொல்வானும்,-இம் மூவர் தாம் அறிவர், தாம் கண்டவாறு. | |
|
உரை
|
|
|
|
|
37. | குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய சால்பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும் தூய்மையுள் தோன்றும் பிரமாணம்;-இம் மூன்றும் வாய்மை உடையார் வழக்கு. | |
|
உரை
|
|
|
|
|
38. | தன்னை வியந்து தருக்கலும், தாழ்வு இன்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய பல் பொருள் வெஃகும் சிறுமையும்,-இம் மூன்றும் செல்வம் உடைக்கும் படை. | |
|
உரை
|
|
|
|
|
39. | புலை மயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல், கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல்,-இம் மூன்றும் நன்மை இலாளர் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
40. | வெகுளி நுணுக்கும் விறலும், மகளிர்கட்கு ஒத்த ஒழுக்கம் உடைமையும், பாத்து உண்ணும் நல் அறிவாண்மை தலைப்படலும்,-இம் மூன்றும் தொல் அறிவாளர் தொழில். | |
|
உரை
|
|
|
|