41. அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும்
தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி
நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்,-இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.
உரை
   
42. கழகத்தால் வந்த பொருள் காமுறாமை,
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல்,
உழவின்கண் காமுற்று வாழ்தல்,-இம் மூன்றும்
அழகு என்ப வேளாண் குடிக்கு.
உரை
   
43. வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற
செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்;-இம் மூன்றும்
வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.
உரை
   
44. விருந்து இன்றி உண்ட பகலும், திருந்திழையார்
புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று
ஈயாது ஒழிந்தகன்ற காலையும்,-இம் மூன்றும்
நோயே, உரன் உடையார்க்கு.
உரை
   
45. ஆற்றானை, ‘ஆற்று’ என்று அலைப்பானும்; அன்பு இன்றி,
ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும்; கூற்றம்
வரவு உண்மை சிந்தியாதானும்;-இம் மூவர்
நிரயத்துச் சென்று வீழ்வார்.
உரை
   
46. கால் தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்து
மேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக்
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி,-இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார்.
உரை
   
47. சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும்
தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும்
நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்;-இம் மூன்றும்
காப்பு இகழல் ஆகாப் பொருள்.
உரை
   
48. வைததனை இன் சொல்லாக் கொள்வானும், நெய் பெய்த
சோறு என்று கூழை மதிப்பானும், ஊறிய
கைப்பதனைக் கட்டி என்று உண்பானும்,-இம் மூவர்
மெய்ப் பொருள் கண்டு வாழ்வார்.
உரை
   
49. ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும்,-இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார்.
உரை
   
50. கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்,
உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்,
இல் இருந்து எல்லை கடப்பாளும்,-இம் மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்.
உரை