தொடக்கம் |
|
|
51. | தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே; சார்ந்து ஒழுகிக்கண்ணும்; சலவர் சலவரே; ஈர்ந்த கல் இன்னார் கயவர்;-இவர் மூவர், தேர்ந்தக்கால், தோன்றும் பொருள். | |
|
உரை
|
|
|
|
|
52. | கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி;-இம் மூன்றும் குறியுடையார் கண்ணே உள. | |
|
உரை
|
|
|
|
|
53. | குருடன் மனையாள் அழகும், இருள் தீரக் கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும்,-இம் மூன்றும் எண்ணின், தெரியாப் பொருள். | |
|
உரை
|
|
|
|
|
54. | தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக் குற்றம் பிறர் மேல் உரைத்தலும்,-இம் மூன்றும் தெற்றெனவு இல்லார் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
55. | அரு மறை காவாத நட்பும், பெருமையை வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும் செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும்,-இம் மூவர் ஒற்றாள் எனப்படுவார். | |
|
உரை
|
|
|
|
|
56. | முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த ஒழுக்கம் பெரு நெறி சேர்தல்,-இம் மூன்றும் விழுப்ப நெறி தூராவாறு. | |
|
உரை
|
|
|
|
|
57. | கொட்டி அளந்து அமையாப் பாடலும், தட்டித்துப் பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான் நாளும் கலாம் காமுறுதலும்,-இம் மூன்றும் கேள்வியுள் இன்னாதன. | |
|
உரை
|
|
|
|
|
58. | பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால் கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத் துன்னிய சொல்லால் இனம் திரட்டல்,-இம் மூன்றும் மன்னற்கு இளையான் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
59. | கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ் விளைவின் கண் போற்றான் உழவும், இளையனாய்க் கள் உண்டு வாழ்வான் குடிமையும்,-இம் மூன்றும் உள்ளன போலக் கெடும். | |
|
உரை
|
|
|
|
|
60. | பேஎய்ப் பிறப்பில் பெரும் பசியும், பாஅய் விலங்கின் பிறப்பின் வெரூஉம், புலம் தெரியா மக்கட் பிறப்பின் நிரப்பு இடும்பை,-இம் மூன்றும் துக்கப் பிறப்பாய்விடும். | |
|
உரை
|
|
|
|