61. ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,
எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல்,-இம் மூன்றும்
வீறு சால் பேர் அமைச்சர் கோள்.
உரை
   
62. நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும்,-இம் மூவர்
எச்சம் இழந்து வாழ்வார்.
உரை
   
63. நேர்வு அஞ்சாதாரொடு நட்பும், விருந்து அஞ்சும்
ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும்,-இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல.
உரை
   
64. நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்
இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்
மக்கள் பெறலின், மனைக் கிழத்தி;-இம் மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.
உரை
   
65. அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற
விட்டகலகில்லாத வேட்கையும், கட்டிய
மெய்ந் நிலை காணா வெகுளியும்,-இம் மூன்றும்
தம் நெய்யில் தாம் பொரியுமாறு.
உரை
   
66. கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய
கோல் கோடி வாழும் அரசும்,-இவை மூன்றும்
சால்போடு பட்டது இல.
உரை
   
67. எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும்,
செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப,
முந்தைப் பழ வினையாய்த் தின்னும்;-இவை மூன்றும்
நொந்தார் செயக் கிடந்தது இல்.
உரை
   
68. இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின்
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும்,-இம் மூன்றும்
நன்று அறியும் மாந்தர்க்கு உள.
உரை
   
69. அருந் தொழில் ஆற்றும் பகடும், திருந்திய
மெய்ந் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து
நெறி மாறி வந்த விருந்தும்,-இம் மூன்றும்
பெறுமாறு அரிய பொருள்.
உரை
   
70. காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால்
வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும்,-இம் மூவர்
செல்வர் எனப்படுவார்.
உரை