71. உடுத்தாடை இல்லாது நீராட்டும், பெண்டிர்
தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்
ஆண்மை உடையவர் நல்குரவும்,-இம் மூன்றும்
காண அரிய, என் கண்.
உரை
   
72. நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;
அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;
மறவனை எவ் உயிரும் அஞ்சும்;-இம் மூன்றும்
திறவதின் தீர்ந்த பொருள்.
உரை
   
73. ‘இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!’ என்பானும்,
பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,
விரி கடலூடு செல்வானும்,-இம் மூவர்
அரிய துணிந்து ஒழுகுவார்.
உரை
   
74. கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், ‘இல் எனக்கு ஒன்று;
ஈக!’ என்பவனை நகுவானும்,-இம் மூவர்
யாதும் கடைப்பிடியாதார்.
உரை
   
75. வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து
உணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண்
தக்கது அறியும் தலைமகனும்,-இம் மூவர்
பொத்து இன்றிக் காழ்த்த மரம்.
உரை
   
76. மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக்
காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்து
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும்,-இம் மூவர்
போற்றற்கு அரியார், புரிந்து.
உரை
   
77. கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி
வடுவான வாராமல் காத்தல்,-இம் மூன்றும்
குடி மாசு இலார்க்கே உள.
உரை
   
78. தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று
வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை;-மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள்.
உரை
   
79. பழி அஞ்சான் வாழும் பசுவும், அழிவினால்
கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து
இல் அஞ்சி வாழும் எருதும்,-இவர் மூவர்
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய்.
உரை
   
80. முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்
நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும்,-இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
உரை