தொடக்கம் |
|
|
91. | பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல்,-இம் மூன்றும் மன்னா உடம்பின் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
92. | விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை ஒன்றும் உணராத ஏழையும், என்றும் இறந்துரை காமுறுவானும்,-இம் மூவர் பிறந்தும் பிறவாதவர். | |
|
உரை
|
|
|
|
|
93. | இருளாய்க் கழியும் உலகமும், யாதும் தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல காதற்படுக்கும் விழைவும்,-இவை மூன்றும் பேதைமை, வாழும் உயிர்க்கு. | |
|
உரை
|
|
|
|
|
94. | நண்பு இலார் மாட்டு நசைக் கிழமை செய்வானும், பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல் இழுக்கு ஆய சொல்லாடுவானும்,-இம் மூவர் ஒழுக்கம் கடைப்பிடியாதார். | |
|
உரை
|
|
|
|
|
95. | அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர் செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின் வெவ் உரை நோனா வெகுள்வும்;-இவை மூன்றும் நல் வினை நீக்கும் படை. | |
|
உரை
|
|
|
|
|
96. | கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ, நல்லவை செய்வான் அரசன்;-இவர் மூவர், ‘பெய்’ எனப் பெய்யும் மழை. | |
|
உரை
|
|
|
|
|
97. | ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த கற்பு உடையாளைத் துறத்தலும்,-இம் மூன்றும் நற் புடையிலாளர் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
98. | செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும், வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும், பெண்பால் கொழுநன் வழிச் செலவும்,-இம் மூன்றும் திங்கள் மும் மாரிக்கு வித்து. | |
|
உரை
|
|
|
|
|
99. | கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்ற பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி அல்லவை செய்யும் அலவலையும்,-இம் மூவர் நல் உலகம் சேராதவர். | |
|
உரை
|
|
|
|
|
100. | பத்திமை சான்ற படையும், பலர் தொகினும் எத் திசையும் அஞ்சா எயில்-அரணும் வைத்து அமைந்த எண்ணின் உலவா இரு நிதியும்,-இம் மூன்றும் மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு. | |
|
உரை
|
|
|
|