6. இல்லை பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை.
உரை
2. ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை.
உரை
3. வாய்ப்புடை வழக்கின் நல் வழக்கு இல்லை.
உரை
4. வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை.
உரை
5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.
உரை
6. உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை.
உரை
7. நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை.
உரை
8. இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை.
உரை
9. இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை.
உரை
10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை.
உரை