தொடக்கம் |
|
|
1. | ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்- பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய். | |
|
உரை
|
|
2. | பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய். | |
|
உரை
|
|
3. | கள் உண்போன் சோர்வு இன்மை பொய். | |
|
உரை
|
|
4. | காலம் அறியாதோன் கையுறல் பொய். | |
|
உரை
|
|
5. | மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய். | |
|
உரை
|
|
6. | உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய். | |
|
உரை
|
|
7. | சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய். | |
|
உரை
|
|
8. | பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய். | |
|
உரை
|
|
9. | பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய். | |
|
உரை
|
|
10. | வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய். | |
|
உரை
|