10காமம் வேண்டுவோன் குறிப்புச்செய் றண்டான்.

(ப-பொ.) காமத்தை விரும்பிய ஒருவன்குறிப்பறிதல் ஒழியான்.

(ப-ரை.) காமம் - காமவின்பத்தை, வேண்டுவோன் - விரும்புகின்றவன், குறிப்புச்செயல் - குறிப்பறிதல், தண்டான் -ஒழியான்.

குறிப்பறிதலாவது தலைமகன் தலைமகளது குறிப்பினை யறிதலும், தோழியது குறிப்பினையறிதலுமாம்.

'இன்பந்தண்டான்' என்ற பாடத்துக்குக் காமவின்பம் நுகர்தல் தவிரான் என்பதாம்.