3சோரா நன்னட் புதவியி னறிப.

(ப-பொ.) ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.

(ப-ரை.) சோரா நல் நட்பு - ஒருவன் தளராத நல்ல சிநேகம் உடையவன் என்பதை, உதவியின் - அவன் தனது சிநேகருக்குச் செய்யும் உதவியினால், அறிப -அறிவர்

சோரா - இளையாத உறுதியுள்ள.

ஒருவர் ஒருவரோடு உறுதியான நட்புடையவர் என்பதற்கு அவர் அவருக்கு ஆபத்திலே செய்யும் உதவியே அறிகுறி. 'ஆபத்திலே அறியலாம் அருமை சினேகிதனை' என்றது ஓர்மூதுரை.

'உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.'

- திருக்குறள்.