8சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப.

(ப-பொ.) சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்.

சோர்வு - வழுவுதல். சொற்சோர்வு - சொல்லவேண்டுவதை மறப்பான் ஒழிதல்.

(ப-ரை.) சொற்சோர்வு உடைமையின் - ஒருவன் சொல்லும் சொற்களில் தவறுதல் உடையனாதலால், எ சோர்வும் - அவனிடத்துள்ள எல்லாத் தவறுகளையும், அறிப -அறிவர்.

ஒருவனிடத்தில் பலவித சோர்வுகள் உண்டு என்பதற்கு அவனுடைய சொற்சோர்வேஅறிகுறி.

'சொற்சோர்வுபடேல்'

- ஒளவையார்.

'சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதன்மாண்பினிதே.'

- இனியா நாற்பது.