3. பழியாப்பத்து

1ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பி லோரை இயல்புகுணம் பழியார்.

(ப-பொ.) கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும்பழியார்.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மக்கள் எல்லாருள்ளும், யாப்பு இலோரை -யாதொரு செய்கையிலும் உறுதியான நிலையில்லாதவருடைய, இயல்பு குணம் - இயற்கையாகிய குணத்தை, பழியார் - எவரும்பழித்துரையார்.

யாப்பு - (யா + பு) - கட்டு : உறுதி : நிலை. 'அது முதற்காயின் சினைக்கையாகும்' என்றபடி, யாப்பிலோரது இயல்பு குணத்தைப் பழியார் எனமுடித்துக் கொள்ளவேண்டும்.

ஒருவர் இயல்பாகவே எக்காரியத்திலும் நிலையில்லாதவ ராயின் அவ்வியல்பைப் பழித்துரைத்தலால் பயனில்லை என்பதாம்.