2மீப்பி லோரை மீக்குணம் பழியார்.

(ப-பொ.) மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும்பழியார்.

(ப-ரை.) மீப்பு இலோசை - மேன்மைக்குணம் இல்லாதவரது, மீக்குணம் - மேன்மையானவற்றைச் செய்யும் இயல்பில்லாமையை, பழியார் - எவரும்பழித்துரையார்.

கீழ்மக்களிடம் மேலோர்க்குரியகுணமும் செய்கையு மில்லாமையை எவரும் பழித்துரையார்.

மீக்குணம் என்பதை மீச்செலவு என்பதுபோலவரம்புகடந்த செய்கையைச் செய்யும் இயல்பு எனக்கொள்வது பொருந்தும்.