6முறையி லரசர்நாட் டிருந்து பழியார்.

(ப-பொ.) நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும்பழியார்.

(ப-ரை.) முறைஇல் - நீதிமுறை இல்லாத, அரசர் நாடு - அரசருடையநாட்டில், இருந்து - வசித்திருந்து, பழியார் - அவ்வரசர் நீதிமுறை செலுத்தாமையை எவரும்பழித்துரையார்.

கொடுங்கோலரசருடைய நாட்டில் வசிப்பவர் அக்கொடுங்கோன்மையைப் பழித்துரைத்தால் அவவ்வரசருடைய கொடுமைக்கு உள்ளாவராதலின் அதுசெய்யார்.

நடுவுநிலைமை - 'பகைநொதுமல் நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை' என்றும், நடுவு - 'ஒருவன் பொருட்குப் பிறன் உரியனல்லன் என்னும் நடுவு' என்றும் உரைப்பர் பரிமேலழகர்.