10சிறியா ரொழுக்கம் சிறந்தோரும் பழியார்.

(ப-பொ.) சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார்.

(ப-ரை.) சிறியார் - கீழோருடைய, ஒழுக்கம் - துராசாரத்தை, சிறந்தோரும் - மேலோரும், பழியார் -பழித்துரையார்.

துராசாரம் கீழோருக் கியல்பாதலால்மேலோர் அதனைப் பழித்துரையார்.