8அறிவிலி துணைப்பாடு தனிமையிற் றுவ்வாது.

(ப-பொ.) அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) அறிவிலி - அறிவில்லாதவனை, துணைப்பாடு - ஒருவன் துணையாகக் கொண்டிருத்தல், தனிமையின் - தனித்திருத்தலின்; துவ்வாது - நீங்கி யொழியாது.

அறிவில்லாதவனைத் துணையாகக்கொண்டிருப்பதுதனித்திருப்பதற்குச் சமானமேயன்றி வேறாகாது. ஆகவே அறிவில்லாதவனைத் துணைக்கோடல் வேண்டா. சிற்றினம் சேராமல் பெரியாரைத் துணைக்கொள்க.என்பதாம்.

'துணைநல மாக்கந் தரும்'

- திருக்குறள்.