3ஈரமில் லாதது கிளைநட் பன்று.

(ப-பொ.) மனத்தின்கண் ஈரமில்லாததுகிளையுமன்று நட்புமன்று.

(ப-ரை.) ஈரம் இல்லாதது - மனத்தின்கண் அன்பில்லாதது, கிளை (அன்று) - சுற்றமுமன்று; நட்பு அன்று -சினேகமும் அன்று.

உறவினர்க்கும் நட்பினர்க்கும்அன்புடைமை உரிய லக்ஷணம். உள்ளன்பிலாதார் சுற்றத்தாருமாகார், நட்பினரும் ஆகார் என்பதாம்.

'விருப்பறாச் சுற்றம் இயையின்அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.'

'அழிவந்த செய்யினும் அன்பறார், அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.'

- திருக்குறள்.