6உறுவினை காய்வோன் உயர்வுவேண்டல் பொய்.

(ப-பொ.) மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்.

'தக்க கருமம்' - பிரதிபேதம்

(ப-ரை.) உறுவினை - மிக்க கருமத்தை, காய்வோன் - செய்யாமல் வெறுப்பவன், உயர்வு வேண்டல் - மேன்மையடைய விரும்புதல், பொய் - பொய்யாம்.

ஆக்கம் - மேன்மேல் உயர்தல்.

உறுவினை என்பதை வினைத்தொகையாகக்கொண்டு, பயன் பெறுதலான காரியம், கைகூடத்தக்க காரியம் என உரைப்பதும் பொருந்தும்.

'உறுவினைக் கயர்லோன்.' - பாட பேதம் (அயர்வு - சோர்வு.)