8பெருமைநோ னாதோன் சிறுமைவேண்டல் பொய்.

(ப-பொ.) பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய்.

(ப-ரை.) பெருமை - பிறர் தன்னை அரியனாகக் கொள்ளும் பெருமையை, நோனாதோன் - வேண்டாதவன், சிறுமை - இழிகுணத்தை, வேண்டல் - விரும்புதல், பொய் - பொய்யாம்.

பிறர் தன்னை அரியனாக மதித்தலை விரும்பாதவன் இழிகுணத்தை விரும்பான். 'பெருமை பெருமிதமின்மை' ஆதலால், பெருமித மில்லாதவன் இழிகுணத்தை விரும்புவதில்லை.