9பொருணசை வேட்கையோன் முறைசெயல் பொய்.

(ப-பொ.) பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்.

நசை - இச்சை. வேட்கை - ஆசைப்பெருக்கம். முறை -நீதி.

(ப-ரை.) பொருள் நசை - பொருளில் விருப்பத்தால் வரும், வேட்கையோன் - பேராசையுடையவன், முறைசெயல் - நீதியை மேற்கொண்டு நடத்தல், பொய் - பொய்யாம்.

மிக்க பொருளை விரும்பிப் பேராசையுற்றவன்நடுவுநிலைமையில் நின்று நீதியை மேற்கொண்டு நடக்கமாட்டான்.

வேட்கை - பொருள்களின்மேல் தோன்றும் பற்றுள்ளம். இந்சூத்திரம் அரசனைக் கருதியது.