6இன்பம்வெய் யோர்க்குத் துன்ப மெளிது.

(ப-பொ.) முயன்றுவரும், தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும்துன்பம் எளிது.

(ப-ரை.) இன்பம் வெய்யோர்க்கு - ஒருகாரியத்தை மேலிட்டுக் கொண்டு முயற்சிசெய்தலால் உண்டாகும் இன்பத்தை விரும்புவாருக்கு, துன்பம் - வறுமை முதலியவற்றால் உண்டாகும் துன்பம், எளிது -எளிதாம்.

முயற்சியால் உண்டாகும் இன்பத்தை விரும்புவோருக்கு வறுமையால் உண்டாகும் துன்பம் ஒரு பொருட்டாகத் தோன்றாது.