9பாரம்வெய் யோர்க்குப் பாத்தூ ணெளிது.

(ப-பொ.) பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப்பகுத்துண்டல் எளிது.

'பெருமையை விரும்பினார்க்கு' என்றும்பிரதிபேதம் உண்டு.

(ப-ரை.) பாரம் வெய்யோர்க்கு - பிறருடைய பாரத்தைத் தாம் தாங்க விரும்பினோருக்கு, பாத்தூண் - தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்களுக்குப் பகுத்துண்ணுதல், எளிது -எளிதாம்.

பாத்தூண் (பாத்து + ஊண். பாத்து - பகுத்து.) பாத்து என்பதில் பகு என்பதன் மரூஉவாகிய பாபகுதி.

'தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்துபிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர்'

- நன்னெறி.

ஆதலால் பகுத்துண்டல் அவர்க்கு எளிதென்பதாம்.