1
9. நல்கூர்ந்த பத்து.

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையி லரசனாடு நல்கூர்ந் தன்று.

(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும்,முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - மனிதரெல்லார்க்கும், முறை இல் - நீதி முறை இல்லாத, அரசன் நாடு - அரசனது நாடானது, நல்கூர்ந்தன்று -வறுமையுடையதாம்.

'இயல்புளி கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.'

'முறைகோடி மன்னவன் செய்யின்உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.'

'நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறு நாடு கெடும்.'

- திருக்குறள்.