7இன்பம் வேண்டுவோன் துன்பந் தண்டான்.

(ப-பொ.) இன்பத்தை விரும்பிய ஒருவன்துன்பத்தைத் துன்பமென்று களையான்.

(ப-ரை.) இன்பம் வேண்டுவோன் - இன்பத்தை விரும்பிய ஒருவன், துன்பம் தண்டான் -அதற்குரிய முயற்சியில் உண்டாகும் துன்பத்தினின்றும்தவிரான்.

சுகமாகவாழ விரும்புவோர் அதற்குரிய முயற்சியில் உண்டாகும் மெய்வருத்தம் முதலிய துன்பங்களைப் பாராட்டமாட்டார். தோட்டி போல் உழைத்துத் துரைபோல் சாப்பிடவேண்டும். துன்பத்துக்குப் பின்வாங்கினால் இன்பம் உண்டாகாது. Of sufferance comes ease.

'துன்புள தெனினன்றோ இன்புளது.' -இராமாயணம்.