33

மதிக்கும் மதிப்பு, இன்னா - துன்பமாம்; அடைக்கலம் பிறர் அடைக்காமாக வைத்த பொருளை, வவ்வுதல் - கவர்ந்து கொள்ளுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, அடக்க (அறிவுடையோர்) அடக்கவும், அடங்காதார் - அடங்கு தலில்லாதவர்க்குக் கூறும், சொல் - சொல்லானாது, இன்னா - துன்பமாம் எ-று.

மீளிமை - பெருமிதமுமாம். துடக்கம் - வளைவு; உடல் வளைந்து வினைசெய்தற் கேற்ற முயற்சியை உணர்த்திற்று; தொடக்கம் என்று கொண்டு யாதானும் நற்கருமஞ் செய்யத் தொடங்குதல் என்றுரைப்பினுமாம். அடங்காதார் சொல் - அடங்காதார் அவையிற் கூறுஞ் சொல் எனினும் ஆம்.

இன்னா நாற்பது உரையுடன்

முற்றும்.