9

இன்னா நாற்பது

கடவுள் வாழ்த்து

 1. முக்கட் பகவ னடி தொழர் தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை1 யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா2 வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.

(பதவுரை.)முக்கண் பகவன் - மூன்று கண்களையுடைய இறைவனாகிய சிவபெருமானுடைய, அடி- திருவடிகளை, தொழாதார்க்கு - வணங்காதவர்களுக்கு, இன்னா - துன்பமுண்டாம்; பொன் பனை வெள்ளையை - அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை, உள்ளாது - நினையாமல், ஒழுகு - நடத்தல், இன்னா - துன்பமாம்; சக்கரத்தானை திகிரிப்படையயையுடையவனாகிய மாயோனை, மறப்பு மறத்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சத்தியான் வேற்படையை யுடையவனாகிய முருகக் கடவுளின், தான் திருவடிகளை, தொழாதார்க்கு - வணங்காதவர்களுக்கு, இன்னா - துன்ப மூண்டாகும் எ-று.

முக்கண் - பகலவன் திங்கள் எரி யென்னும் முச்சுடராகிய மூன்று நாட்டங்கள். பகவன் - பகம் எனப்படும் ஆறு குணங்களையும் உடையவன். அறுகுணமாவன : முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கையுணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல், என்பன. பகவன் என்பது பொதுப்பெயராயினும் ‘முக்கண்' என்னுங் குறிப்பால் இறைவனை யுணர்த்திற்று; இறைவனுக்கு உண்மையும் ஏனையர்க்கு முகமனும் எனக் கொள்ளலுமாம்.


(பாடம்) 1.பொற்பன வெள்ளியை பொற்பன வூர்தியை

2. மன்றப்பின்னாது