இன்னா - துன்பமாம்; மறம் மனத்தார்- வீரத் தன்மையையுடைய நெஞ்சத்தினர், ஞாட்பில் போரின்கண், மடிந்து ஒழுகல் சோம்பி இருத்தல், இன்னா - துன்பமாம்; இடும்பை உடையார் - வறுமை உடையாரது, கொடை - ஈகைத் தன்மை, இன்னா துன்பமாம்; கொடும்பாடு உடையார் - கொடுமையுடையாரது, வாய்ச்சொல் - வாயிற் சொல்லும், இன்னா - துன்பமாம் எ-று. ‘அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொ னான்கும், இழுக்கா வியன்ற தறம்'என்பவாகலின் அறமனத்தார் கூறுங் கடு மொழியும் இன்னாவாயிற்று. உம்மை : எச்சப்பொருளது. இடும்பை - துன்பம்; ஈண்டுக் காரணமாய வறுமைமேல் நின்றது. ‘வளமிலாப் போழ் தத்து வள்ளன்மை குற்றம்'என்று பிற சான்றோருங் கூறினர். கொடும்பாடு -கொடுமை : ஒரு சொல். ‘அருங்கொடும்பாடுகன் செய்துஎன்பது திருச்சிற்றம்பலக் கோவையார்;நடுவுநிலை யின்மையும் ஆம். வாய்ச்சொல் என வேண்டாது கூறியது தீமையே பயின்ற தென வேண்டியது முடித்தற்கு. வாய்ச்சொல்லும் என்னும் உம்மை தொக்கது.
7. ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா நாற்ற மிலாத மலரி னழகின்னா தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா மாற்ற மறியா னுரை.
(ப-ரை.) ஆற்றல் இலாதான் - வலியில்லாதவன், பிடித்த படை கையிற்பிடித்த படைக்கலம், இன்னா - துன்பமாம்; நாற்றம் இலாத - மணமில்லாத, மலரின் அழகு - பூவின் அழகானது. இன்னா - துன்பமாம்; தேற்றம் இலாதான் - தெளிவு இல்லாதவன், துணிவு - ஒரு வினை செய்யத்துணிதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே மாற்றம் - சொல்லின் கூறுபாட்டினை, அறியான் - அறியாதவனது உரை - சொல், இன்னா - துன்பமாம் எ-று. ஆற்றல் - ஈண்டு ஆண்மை யெனினும் ஆம், ‘வானொடென் வன்கண்ண ரல்லார்க்குஎன்பது காண்க. தேற்றம் - ஆராய்ந்து தெளிதல்; ‘தெளிவி லதனைத் தொடங்கார்என்பது வாயுறை வாழ்த்து. மாற்றம் - பேசு முறைமை யென்றும், எதிருரைக்கும் மொழியென்றும் கூறலுமாம். 8. பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா நகையாய நண்பினார் நாரின்மை யின்னா இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா நயமின் மனத்தவர் நட்பு.
|