தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா கான்யா1றிடையிட்ட வூர். (ப-ரை.) யானைஇல் - யானைப்படையில்லாத, மன்னரை - அரசரை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஊனைத் தின்று (பிறிதோர் உயிரின்) ஊனை உண்டு, ஊனை (தன்) ஊனை, பெருக்குதல் - வளர்த்தல், முன் இன்னா மிகவுந் துன்பமாம்; தேன் நெய் - தேனும் நெய்யும், புளிப்பின் புளித்துவிட்டால், சுவை - (அவற்றின்) சுவை, இன்னா - துன்பமாம், ஆங்கு - அவ்வாறே, கான்யாறு - காட்டாறு, இடை இட்ட இடையிலே உளதாகிய, ஊர் - ஊரானது, இன்னா - துன்பமாம் எ-று. ‘யானையில் மன்னரைக் கண்டால் நனியின்னா' என்றாரேனும் அரசர் படையில் யானையில்லாதிருத்தல் இன்னா என்பது கருத்தாகக் கொள்க. ‘படைதனக்கு யானை வனப்பாகும்' என்பது சிறுபஞ்சமூலம். இனியவை நாற்பதிலுள்ள ‘யானையுடைய படைகாண்டன் மிகவினிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே, கான்யாற்றடைகரை யூரினி தாங்கினிதே, மானமுடையார் மதிப்பு என்னுஞ் செய்யுளுடன் இதனை ஒப்பு நோக்குக. 23. சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா துறையிருந் தாடை கழுவுத லின்னா அறைபறை யன்னவர்2சொல்லின்னா வின்னா நிறையில்லான் கொண்ட தவம். (ப-ரை.) சிறை இல்லா - மதில் இல்லாத, மூதூரின் பழைமையாகிய ஊரினது, வாயில் காப்பு - வாயிலைக் காத்தல், இன்னா - துன்பமாம்; துறை இருந்து - நீர்த்துறையிலிருந்து, ஆடை கழுவுதல் - ஆடைதோய்த்து மாசுபோக்குதல், இன்னா துன்பமாம்; அறை - ஒலிக்கின்ற, பறை அன்னவர் - பறைபோன்றாரது, சொல் - சொல்லானது, இன்னா துன்பமாம்; நிறை இல்லான் - (பொறிகளைத் தடுத்து) நிறுத்துந் தன்மையில்லாதவன் - கொண்ட - மேற்கொண்ட, தவம் தவமானது, இன்னா - துன்பமாம்; எ-று. நீர்த்துறையில் ஆடை யொலித்தல் புரியின், நீர் வழி நோயணுக்கள் பரவி இன்னல் விளைக்குமாகலின், "துறையிலிருந்தாடை கழுவுதலின்னா" என்றார். இனம் பற்றிப் பிற தூயதன்மை
(பாடம்) 1.கானாறு. 2. அறைபறை யாயவர்.
|