26

வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல்.

(ப-ரை.) பெருமை உடையாரை - பெருமையுடையவரை, பீடு அழித்தல் - பெருமை யழியக் கூறல், இன்னா - துன்பமாம்; கிழமை உடையார் - உரிமை உடையவரை, களைந்திடுதல் - நீக்கி விடுதல், இன்னா - துன்பமாம்; வளமை இலாளர் - செல்வ மில்லாதவருடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; இளமையுள் - இளமைப் பருவத்தில், மூப்பு - மூதுமைக்குரிய தன்மைகள், புகல் உண்டாதல், இன்னா - துன்பந் தருவதாகும் எ-று.

பீடு அழித்தல் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீர்மையெய்தி இரண்டாவதற்கு மடிபாயின. பீடழித்தலாவது பெருமையுளதாகவும் அதனை யிலதாக்கிக் கூறுதல் கிழமையுடையார் - பழையராக வரும் அமைச்சர் முதலாயினார்; நண்பரும் ஆம். கிழமையுடையாரைக் கீழ்ந்திடுதலின்னா என்று பாடங் கொள்ளுதல் சிறப்பு;பழமையெனப்படுவ தியாதெனின் யாதுங்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு' என்னும் திருக்குறளுங் காண்க. வளமை வண்மையுமாம்.

28. கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல்.

 (ப-ரை.) கல்லாதான் - (நடத்த வேண்டிய முறையைக்) கல்லாதவன், ஊரும் - ஏறிச் செலுத்தும், கலிமா - மனஞ்செருக்கிய குதிரை, பரிப்பு - (அவனைச்) சுமந்து செல்லுதல், இன்னா துன்பமாம்; வல்லாதான் - கல்வி யில்லாதவன், சொல்லும் சொல்லுகின்ற, உரையின் பயன் - சொல்லின் பொருள், இன்னா துன்பமாம்; இல்லார் - செல்வ மில்லாதவருடைய, வாய்ச் சொல்லின் - வாயிலிருந்து வரும் சொல்லினது, நயம் - நயமானது, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கல்லாதவன் - கல்வியில்லாதவன், கோட்டி கொளல் - கற்றவ ரவையில் ஒன்றைக் கூறுதல், இன்னா - துன்பமாம் எ-று.

கலி - ஆரவாரமும் ஆம். வல்லாதான் ஒன்றனைச் செய்ய மாட்டாதான் எனினும் அமையும். இல்லார் வாய்ச்சொல்லின் நயமின்னா என்பதனை‘நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்' என்னுந் தமிழ்மறை யானுமறிக. கோட்டிகொளல் : ஒருசொல் ; அவையின்கண் பேசுதல் என்னும் பொருளது;‘அங்கணத்துளுக்க...... கோட்டி கொளல்' என்பதுங் காண்க