29. குறியறியான் மாநாக1மாட்டுவித்த லின்னா தறியறியா2னீரின்கட் பாய்ந்தாட3லின்னா அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா செறிவிலான் கேட்ட மறை. (ப-ரை.) குறியறியான் - (பாம்பாட்டுதற்குரிய மந்திர முதலியவற்றின்) முறைகளை அறியாதவன், மாநாகம் - பெரிய பாம்பினை, ஆட்டுவித்தல் - ஆடச்செய்தல், இன்னா - துன்பமாம்; தறி அறியான் - உள்ளிருக்கும் குற்றியை யறியாமல், நீரின்கண் - நீரில் பாய்ந்து, ஆடல் - குதித்து விளையாடுதல் இன்னா - துன்பமாம். அறிவு அறியா - அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத, மக்கள் - பிள்ளைகளை பெறல் - பெறுதல், இன்னா - துன்பமாம்; செறிவு இலான் அடக்கம் இல்லாதவன், கேட்ட மறை - கேட்ட இரகசியம், இன்னா - துன்பமாம் எ-று. தறி - குற்றி; கட்டை, அறிவறியான் என்னின் அறிவு வறியனாயினான் : ஆவது கல்லா இளமையன் என்க. ‘அறிகொன்று' என்புழிப்போல, ஈண்டு அறியென்பது முதனிலைத் தொழிற்பெயர். அறிவறியா மக்கள் - அறிவேண்டுவன அறியமாட்டாத மக்கள் : ‘அறிவறிந்த மக்கள்' என்பதற்குப் பரிமேலழகர்கூறிய பொருளை நோக்குக. செறிவு - அடக்கம் : ‘செறிவறிந்து சீர்மை பயக்கும்'என்னுங் குறளில் செறிவு இப் பொருட்டாதல் காண்க : அடக்கமில்லாதவன் மறையினை வெளிப்படுத்தலின் ‘கேட்ட மறையின்னா' என்றார். 30. நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா4 கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா கடும்புலி வாழு மதர்.
(ப-ரை.) நெடுமரம் - நெடிய மரத்தினது, நீள் கோட்டு - நீண்ட கிளையின், உயர் - உயரத்திலிருந்து, பாய்தல் கீழே குதித்தல், இன்னா - துன்பமாம்; கடும் சினம் - மிக்க கோபத்தினையுடைய, வேழத்து எதிர் - யானையின் எதிரே, சேறல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; அரவு - பாம்பு, ஒடுங்கி உறையும் - மறைந்து வசிக்கின்ற, இல் - வீடானது, இன்னா - துன்பமாம்; கடும் புலி -
(பாடம்) 1. மானாகம், 2. இன்னா தறிவறியான். 3. கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல். 4. நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா
|