தொடக்கம் | ||
இன்னா நாற்பது பாடல் தொகுப்பு 1 முதல் 5 வரை
|
||
1. | பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா; தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா; அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா, மந்திரம் வாயா விடின். |
உரை |
2. | பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா; ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா; பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா, காப்பு ஆற்றா வேந்தன் உலகு. |
உரை |
3. | கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா; நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா; கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா, தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. |
உரை |
4. | எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா; கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா; திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா, பெரு வலியார்க்கு இன்னா செயல். |
உரை |
5. | சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா; உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா; முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா, மறை இன்றிச் செய்யும் வினை. |
உரை |