தொடக்கம் | ||
இன்னா நாற்பது பாடல் தொகுப்பு 11 முதல் 15 வரை
|
||
11. | உடம்பாடு இலாத மனைவி தோள் இன்னா; இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா; இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா, கடன் உடையார் காணப் புகல். |
உரை |
12. | தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா; வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா; புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா, முலை இல்லாள் பெண்மை விழைவு. |
உரை |
13. | மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா; துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா; பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா, பிணி அன்னார் வாழும் மனை. |
உரை |
14. | வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா; துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா; புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா, உணர்வார் உணராக்கடை. |
உரை |
15. | புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா; கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா; இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா, பல்லாருள் நாணுப் படல். |
உரை |