தொடக்கம் | ||
இன்னா நாற்பது பாடல் தொகுப்பு 26 முதல் 30 வரை
|
||
26. | பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா; ‘அரியவை செய்தும்!’ என உரைத்தல் இன்னா; பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா, பெரியார்க்குத் தீய செயல். |
உரை |
27. | பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா; கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா; வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா, இளமையுள் மூப்புப் புகல். |
உரை |
28. | கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா; வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா; இல்லார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா, கல்லாதான் கோட்டி கொளல். |
உரை |
29. | குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா; தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா; அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா, செறிவு இலான் கேட்ட மறை. |
உரை |
30. | நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா; கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா; ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா, கடும் புலி வாழும் அதர். |
உரை |