சலம் - மாறுபாடு. ‘தீயினத்தி, னல்லற் படுப்பதூஉமில்' என்றார் பிறரும். புலம் - அறிவு , ‘வாய்மொழி' என்றதுதீயசொற் பயிலாவென்ற சிறப்புத் தெரித்தற் கென்க. ‘நல்லார்சொற் கேட்பதுவு நன்றே ' என்றார் பிறரும். மன்னுயிர்க்கெல்லாம் உரிமைப்படவாழ்தலாவது மன்னுயிரெல்லாந் தன்னுயிரெனக் கொண்டுஒழுகுதல். "உலகு பசிப்பப் பசிக்குமுலகு துயர்தீரத் தீரு நிலவு நிறுத்திவாழ் வஞ்சி யுடையாள்வி யென்னு மொருத்தியா லுண்டிவ் வுலகு" என்றிருத்தல் காண்க. 21. பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் திறந்தெரிந்து வாழ்தல் இனிது. (ப-ரை.) பிறன் - பிறனுடைய, கை பொருள் - கைப்பொருளை, வௌவான் - அபகரியாதவனாய், வாழ்தல் - வாழ்வது, இனிது-; அறம் புரிந்து - அறத்தைச் செய்து, அல்லவை நீக்கல் பாவங்களைச் செய்யாமை, இனிது-; மறந்தேயும் - மறந்தாயினும், மாணா - மாட்சிமைப்படாத, மயரிகள் - அறிவிலிகளை, சேரா திறம் - சேராத வழிகளை, தெரிந்து வாழ்தல் - ஆராய்ந்து அறிந்து வாழ்வது,இனிது-. ‘கைப்பொருள் கொடுத்துங் கற்றல்' என்புழிக் கைப்பொருளாவது சேமநிதியென்பர் நச்சினார்க்கினியர். பிறர் பொருளெட்டியே யெனவும் என்றார் பிறரும். ‘அல்லவை நீக்கல்' என்றார், ‘அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்'ஆகலின். மேல் ‘சலவரைச் சாரா விடுத லினிது என்றார். இதனுள் 'மறந்தேயு மாணா மயரிகட் சேராத், திறந்தெரிந்து வாழ்தலினிது' என்றதென்னை யெனின், சலவரென்பார் பிறரை மயக்குவாரும், மயரிகளென்பார் தாம் மயங்குவாரு மாகலானும், மயக்குவாரைச் சேர்தலினும் மயங்குவாரைச் சேர்தல் பேரிடர் விளைத்தலானுமென்க.
|