6

உற பேணி ஏத்தல்' என முடித்து' ‘திருமுன் சென்று நன்கு விரும்பி வாழ்த்தல்' எனவும்; ‘முந்து அமர்ந்து உற பேணி ஏத்தல் ' என முடித்து ‘ திருமுன் இருந்து நன்கு விரும்பி வாழ்த்தல் எனவும் பொருள்கோடற்கிடனிருத்த லறிக; ‘சேர்தல் ஏத்தல்' ‘ தொழல்' என மனம் வாக்குக் காயமென்னுந்' திரிகரண வழிபாடு' கூறினாராதலுணர்க.

நூல்

1. பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

(ப-ரை.)பிச்சை புக்கு ஆயினும் - பிச்சை யெடுத்துண்டாயினும் ; கற்றல் - (கற்பனவற்றைக் கசடறக்) கற்றல் ; மிக இனிது ; நல் சவையில் - (அங்ஙனங் கற்ற கல்விகள்) நல்ல சபையின் கண் கைக்கொடுத்தல் - (தமக்கு) வந்துதவுதல், சாலவும் - மிகவும், முன் இனிது - முற்பட வினிது ; முத்து ஏர் முறுவலார் - முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது, சொல் - வாய்ச்சொல், இனிது -; ஆங்கு - அது போல, மேலாயார்ச் சேர்வு - பெரியாரைத் துணைக் கொள்ளுதல், தெற்றவும் இனிது - தெளியவுமினிது.

‘ஆயினும் என்புழி உம்மை இழிவு சிறப்பு.

" கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே "

என்றார் பின்னோரும். சவை - ‘சபா' என்னும் வடசொல் ‘ஆ' ஈறு ‘ஐ' ஆதல் முறைபற்றிச் ‘சபை' என்றாகி, சகர வகர வொற்றுமை பற்றிச் ‘சவை' என்றாயது.

நற்சவை - சபைக்கு நன்மையாவது நல்லோர் கூடியிருத்தல்.
அதனை,

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே" (புறம்: 177)

என்பதனா னறிக. கைக்கொடுத்தலாவது கற்றன வெல்லாம் வேண்டுமுன் நினைவிற்கு வந்து நிற்றல்.