32

(ப-ரை.) அடைந்தார் - (தம்பால்) அடைக்கலம் புக்கார் , துயர் கூரா - துன்ப மிக்கடையாது, ஆற்றல் - செய்வது , இனிது-; கடன் கொண்டும் - கடன் வாங்கியும், செய்வன - செய்யத்தக்கவற்றை, செய்தல் - செய்வது, இனிது-; சிறந்து அமைந்த - மிக்குநிறைந்த, கேள்வியர் ஆயினும் - நூற்கேள்வியை யுடையவரானாலும் , ஆராய்ந்து அறிந்து - ஆராய்ந்தறிந்தே, உரைத்தல் - (ஒன்றைச்) சொல்லுதல், ஆற்ற இனிது - மிக வினிது.

‘நடுக்குற்றுத் தற்சேர்ந்தார்துன்பம் துடையார் என்றார் பிறரும்.

சரணாகத ரக்ஷணஞ் செய்தல் பேரறமென்பார் 'அடைந்தார் துயர்கூரா வாற்ற வினிதே ' என்றார். காகாசுர சரணாகதி, சுக்ரீவ சரணாகதி, விபீஷண சரணாகதி முதலிய பல சரணாகதிகளைப் பற்றிக் கூறுதலின் ஒருசார் இராமாயண மென்னும் இதிகாச முற்றுஞ் சரணாகதி சாத்திரமென்பதூஉந் தெரிந்து கொள்க.

கூரா - கூராது என்னும் வினையெச்சங் கடைக்குறைந்து நின்றது. இனி, அதனை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச மெனவும், எதிர்மறை வினையாலணைந்த பெயரெனவும் கொண்டு பொருளுரைப்பாரு முளர்.

செய்யத்தக்கவாவன வருணத்திற்கும் நிலைக்கும் இன்றியமை யாதவும் கடமையாயவும் பெரும்பயனுடையவும் பின்இன்பம் பயப்பவும் முதலாயின.

‘கடன் கொண்டும்' என்புழி உம்மை இழிவுசிறப்பு.

"அறியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இம்மை அரிதே வெளிறு"

(குறள் - 503)

என்றவாறு கல்வி கேள்விகளின் மிக்கார் மாட்டும் ஒரோ வழி அறியாமை யுளதாகலின், ‘சிறந்தமைந்த கேள்விய ராயினுமாராய்ந் தறிந்துரைத்த லாற்ற விவினது'என்றார்.

32. கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல்.

(ப-ரை.) கற்று அறிந்தார் - (நூல்களைக்) கற்று (அவற்றின் பொருளை) உணர்ந்தவர், கூறும் - சொல்லுகின்ற, கருமப்பொருள் - காரியத்தினது பயன், இனிது-; பற்று அமையா (குடிகண்மாட்டு)