9

ஏவது ‘ஏவு' முதனிலைத் தொழிற்பெயரும், ‘உணர்வதுடையார் ' (நாலடி) என்புழிப்போல ‘அது' பகுதிப் பொருள் விகுதியுமாம். அன்றி, ‘மேவா ரிலாஅக் கடை' (திருக்குறள்) என்புழிப்போல, ‘ஏவுவது' என்பது விகாரமாயிற் றென்பது மொன்று. இனி ‘ஏவியது' என்னும் வினையாலணைந்த பெயர் ‘ஏவது எனக் குறைந்த தென்பாருமுளர். இளங்கிளையாவார் மிக்க ளென்க ; ‘ கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி ' என்னும் நாலடிச் செய்யுள் காண்க. ஏர் - எருது ; ‘ஏரழ குழுபெற்றப்பேர் ' என்னும் 11 ஆவது நிகண்டு. நாளுங்கற்றல் - நாண்முழுதுங் கற்றலுமாம். வேற்றூராகலின் நட்புக் கோடல் நன்றென்பார், ‘கோணட்புத் திசைக்கு ' என்றார். திசைக்கு : வேற்றுமை மயக்கம் . ‘ தான் செல்லுந், திசைக்குப் பாழ் நட்டாரையின்மை என்னும் நான்மணிக்கடிகையும் ஈண்டுக் கருதத்தக்கது. (4)

4. யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே1
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு.

(ப-ரை.) யானையுடைய படை - யானைகளையுடைய சேனையை, காண்டல் - (அரசன்) செய்து கொள்ளுதல் முன் இனிது - முற்பட வினிது ஊனை தின்று - (பிறிதோ ருயிரின்) தசையைத் தின்று ; ஊனைப்பெருக்காமை - (தன்) உடம்பை வளர்க்காமை, முன் இனிது -; கான்யாற்று அடை கரை ஊர்-முல்லை நிலத்து யாற்றினது நீரடை கரைக்கண் உள்ள ஊர், இனிது - வாழ்தற் கினிது ; ஆங்கு - அவைபோல, மானம் உடையார் - மானமுடையவரது, மதிப்பு கொள்கை ,இனிது -;

"கடலெனக் காற்றெனக் கடுங்கட்கூற்றென
வுடல்சின வுருமென"(குணமாலையார் - 123)

எனவும்,

"காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக்
கூற்றென "(கனக மாலையார் - 281)

எனவும் சிந்தாமணி யுடையார் கூறியபடி, விசையாற் காற்றும், ஒலியாற் கடலும், வடிவால் வரையும், அச்சத்தா லுருமும், கொலையாற் கூற்று மெனத்தக்க யானைகளைப் பெறுதலின் அருமையும், பெற்ற வழி யுளதாம் பயனுந் தோன்ற ‘யானையுடைய படைகாண்டன் முன்னினிதே ' எனவும்.


(பாடம்) 1. மிகவினிதே