என்றவிடத்தும் ‘ஊர் முனி பண்டம் ' என்றிருத்தல்கண்டு கொள்க. ‘தானே' என்புழி ஏகாரம் சிறப்பு. எத் துணையூக்க முடையார்க்குந் தாமதகுணத்தான்மடிவருதலியல்பெனினும் அஃது அங்ஙனம் வந்துழி அதன்கண்வீழாது, முயற்சியின் தலைநிற்றல் நன்றென்பார், ‘தானே மடிந்திராத் தாளாண்மை முன்னினிதே'என்றார். 34. எல்லிப் பொழுது வழங்காமைமுன்இனிதே சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்ளர் விடுதல் இனிது. (ப-ரை.) எல்லி பொழுது - இரவின்கண் ; வழங்காமை - வழி நடவாமை, முன் இனிது - மிக வினிது ; சொல்லுங்கால் (பலவற்றைச் சொல்லுமிடத்து, சோர்வு இன்றி - (ஒன்றிலும்) மறதியின்றி, சொல்லுதல் -சொல்வதன், மாண்பு - மாட்சிமை, இனிது-: புல்லி கொளினும் - (வலியத் தாமாகவே வந்து) பொருந்தி நட்புக் கொள்ளினும், பொருள் அல்லார் - ஒரு பொருளாக மதிக்கப்படாத கயவருடைய, கேண்மை - நட்பினை கொள்ளா விடுதல் - கொள்ளாது நீக்குதல்,இனிது-. விடப்பூச்சிகள் முதலிய சரித்தலானும், பனி முதலியன நோய் செய்தலானும் ‘எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே' என்றார். சோர்வு - குற்றமாயின், சொற்குற்றம், பொருட்குற்றம் உள்ளிட்டன வென்க. பொருளல்லார் - அறிவிலாதார் இழிகுலத்தார் என்பர் பரிமேலழகர். 35. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல்முன்இனிதே முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப்பாங்கறிதல் 1வெற்வேறில் வேந்தர்க்கு இனிது. (ப-ரை.) வெற்றி வேல் - வெற்றியைத் தருகின்ற வேலையுடைய, வேந்தற்கு - அரசனுக்கு, ஒற்றினால் - ஒற்றராலே,ஒற்றி
(பாடம்) 1. வெற்றல் வேல்.
|