35

எல்லார் கண்ணும் நிகழ்வனவற்றை) ஒற்றுவித்து, பொருள் தெரிதல் - (அவற்றின்) பயனை ஆராய்தலின், மாண்பு - பெருமை, இனிது -; முன்தான்தெரிந்து - தான் குற்றத்தை) முன்னர் ஆராய்ந்து, முறை செய்தல் - தண்டஞ் செய்தல், முன் இனிது - மிக வினிது பற்று இலனாய் - (ஒருவர்க்குப்) பற்றிலனாய், பல் உயிர்க்கும் - எல்லார்க்கும், பாத்து - (அப் பற்றினைப் பகுத்து, பாங்கு உற்று அறிதல் - எல்லாரிடத்தும் (தானும்) சென்று குற்றமுளவாயின்) அறிதல்,இனிது -.

"ஒற்றினா னொற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்"

(குறள் - 538)

என்றிருத்தலின், ‘ஒற்றினா னொற்றிப் பொருள் தெரிதன் மாண்பினிதே ‘என்றார். ஒன்றி : பிறவினைப் பொருளில் வந்த தன் வினை, ‘முன்தான் தெரிந்து முறை செய்தன் முன்னினிதே ' என்றது, தன் கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் அக் குற்றத்தைத் தான்முன்னர் ஆராயாத அரசற்கு அக் குற்றத்திற்குச் சொல்லியதண்டத்தை நூலாரோடும் ஆராய்ந்து அதனளவிற்றாகச்செய்தல் கூடாமையி னென்க.

"ஒற்றின் தெரியா சிறைப்புறத்தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்துங் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினுங் கேளாமை யன்று"

(நீதிநெறி - 32)

என்றிருத்தலின், ‘உற்றுப் பாங்கறிதல்' என்றா ரென்க. ‘வெற்றிவேல்' என்பது கருத்துடையடை:இம்மூன்றையுஞ் செய்யானாயின் இவற்குவேல்போரின்கண் வெற்றியைத்தாராதென்பது கருத்தாகலின்.

36. அவ்வித் தழுக்கா றுரையாமைமுன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.

(ப-ரை.) அவ்வித்து - மனக்கோட்டஞ் செய்து, அழுக்காறு உரையாமை - பொறாமைச் சொற்களைச் சொல்லாமை, முன் இனிது - மிக வினிது செவ்வியனாய் - மனக்கோட்ட மிலனாய், சினம் செற்று கடிந்து - கோபத்தைப் பகைத்து நீக்கி, வாழ்வு - வாழ்வது இனிது - ; கவ்விக்கொண்டு - மனம் அழுந்தி நிற்ப, தாம் கண்டது - தாங்கள் கண்ட