36

பொருளை , காமுற்று (பெற) - விரும்பி, வவ்வார் - (சமயங்கண்டு) அபகரியரதவராய், விடுதல் - (அதனை மறந்து) விடுதல்,இனிது -.

"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும் "

(குறள் - 168)

ஆகலின், ‘அழுக்கா றுரையாமை முன்னினிதே' எனவும்;

"சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும்
ஏமாப் புணையைச் சுடும்"

(குறள் - 39)

ஆகலின், ‘செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே' எனவும்,

"நடுவின்றி நன்பொருள்வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்"

(குறள் - 171)

ஆகலின், ‘கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று, வவ்வார் விடுத லினிது ' எனவுங் கூறினார். கவ்வித்தாங் கொண்டு என்புழி ‘கொண்டு எச்சதிரிபென்க.

தாம் : அசை

37. இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
லிடமென் றுணர்தல் இனிது.

(ப-ரை.) இளமையை - தனக்குள்ள இளமைப் பருவத்தை, மூப்பு என்று - முதுமைப் பருவமென்று, உணர்தல் - நினைத்தல் இனிது-; கிளைஞர்மாட்டு - சுற்றத்தாரிடத்தே, அச்சு இன்மை - அச்சத்திற்குக் காரணமாகாத இனிய சொற்களை, கேட்டல் கேட்பது, இனிது-; தட - பெரிய, மென்மை - மென்மையாகிய, பணை - மூங்கிலை யொத்த, தோள் -தோள்களையும், தளிரியலாரை - தளிரை யொத்த மென்மையையுமுடைய பிற மகளிரை, விடம் என்று - நஞ்சென்று , உணர்தல் -நினைத்தல் இனிது-.

"மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்கா யுதிர்தலும் உண்டு "

(நாலடி - 19)

ஆகலின், ‘இளமையை மூப்பென் றுணர்த லினிதே ' என்றார்.