12

"ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்"

(குறள் - 33)

என்றார் பொய்யில் புலவரும். தமது தன்மையை விடாதார் பகைவராயினும், நொதுமலராயினும், நண்பராயினும் பயனுடை மொழிகளையே பகர்தலின் ‘பாற்பட்டார் கூறும் பயமொழி ' என்றார். கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய எல்லா மிருந்தும் ஒருவன் கண் நாணொன் றில்லையாயின அவன், தன்னை யடைந்தாரைக் கைவிடுவ னென்பது, ‘வாய்ப்புடையராகி வலகைளல்லாரைக், காப்படையக் கோட லினிது'என்பதன் கருத்தென்க.

7. அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.

(ப-ரை.) அந்தணர் - பிராமணர்க்கு, ஓத்து உடைமை - வேதத்தினை, மறவாமை, ஆற்ற மிக இனிது - மிகவினிது; பந்தம் உடையான் - (மனைவி மக்கண் முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன், படை ஆண்மை - சேனையை ஆளுந்தன்மை, முன் இனிது - முற்பட வினிது ; தந்தையே ஆயினும் -(தன்னைப்பெற்ற) தந்தையே யானாலும், தான் அடங்கான் ஆகுமேல அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கட் சென்று) அடங்கானெனின், கொண்டு அடையான் ஆதல் - அவன் சொற் கொண்டு அதன்வழி நில்லாதானாதல்,இனிது-.

அந்தணர் - அழகிய தன்மை யுடையார் அல்லது வேதாந்தத்தை அணவுவார் என்பது சொல்லின்படி பொருள். அதனை,

"அந்தண்மை பூண்ட அருமறையந்தத்துச்
சிந்தைசெ யந்தணர்"

என்னுந் திருமூலநாயனார் திருவாக்கா னறிக. ஓதப்படுதலின் ஓத்தாயிற்று. பார்ப்பார் வேதத்தை மறந்துழி இழிகுலத்தரா மாகலின், மறக்கலாகா தென்னுங் கருத்தாற்செந்நாப்போதாரும்,

"மறப்பினு மோத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்"

என்னும் பாவின்கண் ‘மறப்பினும்' என்றமை காண்க. உறவினர் மாட்டுப் பற்றுடையானாயின் பழிக் கஞ்சித் தன் சேனையில் ஓருயிர்க்கும் வீணாக இழிவு நேராதபடி பாதுகாப்பானாகலின் பந்தமுடையான் படையாண்மை முன்னினிதே ' என்றார்.