அடங்கி வாழ்வு - தான் அடங்கி வாழ்தல், இனிது-; ஊனம் ஒன்று இன்றி குறைவு சிறிதுமில்லாது, உயர்ந்த பொருள் உடைமை மிக்க பொருளுடையராதல், மானிடவர்க்கு எல்லாம் - எல்லா மக்கட்கும்,இனிது -; மானம் அழிதல் - நிலையினின்றுந்தாழ்தல். "தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை" (குறள் - 964) எனவும் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் " (குறள் - 969) எனவும் பிறருங் கூறுதலின் ‘மான் மழிந்தபின் வாழாமை முன்னினிதே ' என்றார். ஒருவன் தானடங்கி வாழானாயின் அவன் குடியிருப்புச் சிதைதல் ஒருதலை யெனல் குறித்தன ரென்க. ஊனமொன்றின்றி யுயர்ந்த பொருளாவது கல்வியாம் ;என்னை? "கேடில்விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை " (குறள் - 400) எனவும், "தம்மிற்றம் மக்களறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது" (குறள் - 68) எனவும் பெரியாரும் பணித்தமையி னென்க. கலித்தொகையுடையார் ஒரு காரணம் பற்றிச் செல்வப் பொருளைக் ‘கேடில் விழுச்செல்வம்' என்றாரேனும்,நச்சினார்கினியர் வழுவமைத்தமையுங் கண்டு தெளிக. ‘ஒன்று' என்புழி முற்றும்மை விகாரத்தாற்றொக்கதென்க. 14. குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து மனனஞ்சான் ஆகல் இனிது. (ப-ரை.) குழவி - குழந்தைகளது, தளர்நடை - தளர்ந்த நடையை, காண்டல் - காணுதல், (பெற்றோர்க்கு) இனிது-; அவர் மழலை - அக்குழந்தைகளின் மழலைச் சொற்களை , கேட்டல்-; அமிழ்தின் - தேவாமுதத்தினும் , இனிது-; வினையுடையான் - தீவினை செய்தவன், வந்து அடைந்து - (அதன்பயனாகிய
|