20

என்னும் பாவானு மறிக. இனி , மனத்துக்கொள்ளுதல் எனினுமாம். ‘பிறன்மனை நோக்காத பேராண்மை' என்பதற்குப்பரிமேலழகர் ‘பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண் தகைமை என உரை செய்திருத்தல் காண்க. வான் : ஆகுபெயர்.

16. சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகுஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.

(ப-ரை.) கற்றார் முன் - கற்றவர்க்கு முன்பு, கல்வி உரைத்தல் தங் கல்வியைச் சொல்லி ஏற்றுதல், மிக இனிது - மிகவினிது ; மிக்காரை -(அறிவான்) மேம்பட்டாரை; சேர்தல் பொருந்தல், மிகமாண - மிக மாட்சிமைப்பட, முன் இனிது முற்பட வினிது; எள் துணை ஆனும் - எள்ளளவாயினும், இராவது (தான் பிறரிடம்) யாசி யாது, தான் ஈதல் - (பிறர்க்குக்) கொடுத்தல், எ துணையும் - எல்லா விதத்தானும், ஆற்ற இனிது - மிகஇனிது.

"கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங்
குற்றந் தமதே பிறிதன்று"

(நீதிநெறி விளக்கம் - 25)

என்றிருத்தலின, ‘கற்றார் முற் கல்வியுரைத்தன மிக வினிதே எனவும்,

‘நல்லினத்தி னூங்குந்துணையில்லை என்றிருத்தலின்,
‘மிக்காரைச் சேர்தன் மிகமாண முன்னினிதே எனவும்;
"எள்ளுவ என்சில இன்னுயி ரேனுங்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்"

(கம்பர்)

என்றிருத்தலின், ‘எள்துணையானு மிரவாது தானீதல், எத்துணையுமாற்ற வினிது' எனவுங்கூறினா ரென்க.

17. நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது.

(ப-ரை.) நட்டார்க்கு - (தன்கண்) நட்புடையார்க்கு, நல்ல செயல் - இனியவற்றைச் செய்தல், இனிது-; எ துணையும் ஒட்டாரை எவ்வளவும் (தன் பகைவரோடு) சேராதவரை ஒட்டிக்கொளல் -