(ப-ரை.) புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மேலோரை - (குதிரை முதலாயினவற்றின்) மேலிருந்தவரை, கீழோர் - கீழ் நின்ற காலாட்கள், குறுகி சென்ற சார்ந்து, குறைத்திட்ட - துணித்த, கால் ஆர் சோடு காற்கிட்ட அரணத்தோடு, அற்ற - அறுபட்ட, கழல், கால் - வீரக்கழலணிந்த கால்கள், இருங்கடல் - பெரிய கடலுள், ஊண் இல் - இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற - சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன எ-று. சோடு - சுவடு என்பதன் மரூஉ: அரணம் என்பது பொருள். அரணம்-செருப்பு. சுற-இது 'குறியதனிறுதிச் சினைகெட' என்னுஞ்சூத்திரத்து இலேசானே ஆகாரங் குறுகி உகரம் பெறாது நின்றது. நீலச்சுறா என்னும் பாடத்திற்குக் கரிய சுறாமீன்கள் என்று பொருள் கொள்க. (9) 10. பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற் செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை.) புனல் நாடான் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், தெவ்வரை-பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பல் கணை - பல அம்புகளும், எ வாய் உம் எவ்வுறுப்பிலும், பாய்தல்இன்-பாங்தலால், செல்கலாகாது - செல்ல மாட்டாது, ஒல்கி - தளர்ந்து, உயங்கும் - வருந்தும், களிறு எல்லாம் - யானைகளெல்லாம், தொல் சிறப்புஇன் தொன்றுதொட்டு வருஞ்சிறப்பினையுடைய, செவ்வல் குன்றம்போல் - தாதுமலைபோல, தோன்றும் - தோன்றா நிற்கும் எ - று. செல்கலாது: வினையெச்சம்: குவ்வும் அல்லும் சாரியைகள், செவ்வல்: பண்புப்பெயர். அம்:சாரியை. தாதுமலை-சிந்தூர மலை, 'இங்குலிகக் குன்றேபோற் றோன்றும்' என முன் வந்தமையும் காண்க. (10) 11, கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா ரிட்ட1 ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து கண்காணா யானை யுதைப்ப விழுமென மங்குன் மழையி னதிரு மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து. 1 . 'மைந்திழந்தாரிட்ட' என்றும் பாடம்.
|