16

(ப-ரை.) செரு மொய்ம்புஇன் - போர் வலியையுடைய, சேஎய் செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - போர்க்களத்தில், நிரை கதிர் - நிரைத்த வொளியினையுடைய, நீள் எஃகம் - நீண்ட வாளை, நீட்டி-பின்னே வாங்கி, வயவர்-வீரர்கள், வரைபுரை-மலையையொத்த, யானைகை-யானைகளின் கைகளை, நூற-துணிக்க, வரைமேல்-மலையின்மேல், உரும் எறி-இடிவிழுந்த, பாம்புஇன்-பாம்பைப் போல, புரளும்-புரளாநிற்கும் எ-று.

பாம்பு உருமெறியப்பட்டு மலைமேனின்றும் விழுந்து புரளுமாறுபோலக் கையும் வாளெறியப்பட்டு யானையினின்றும் விழுந்து புரளாநிற்கும் என்க. எஃகம் வாளினையும், நீட்டல் பின் வாங்கலையும் குறித்து நின்றன. எறி என்னும் பெயரெச்ச முன்னிலைபாம் பென்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது 

(13)

 14. கவளங்கொள் யானையின் கைதுணிக்கப்1 பட்டுப்
பவளஞ் சொரிதரு பைபோற் றிவளொளிய2
வொண்செங் குருதி யுமிழும் புனனாடன்
கொங்கரை யட்ட களத்து.

(ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், கொங்கரை - கொங்குநாட்டவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், கவளம் கொள் - கவளத்தைக் கொள்ளும், யானை கை - யானைகள் (தம்) துதிக்கைகள், துணிக்கப்பட்டு - துண்டு படுத்தப்பட்டு, பவளம் சொரிதரு பவளத்தைச் சொரியா நின்ற, பைபோல் - பையைப்போல, திவள் ஒளிய - விளங்கும் ஒளியையுடைய, ஒள் - ஒள்ளிய, செம்குருதி - சிவந்த உதிரத்தை, உமிழும் - உமிழா நிற்கும் எ-று.

கவளம் - யானையுணவு: 'கல்லாவிளைஞர் கவளங்கைப்ப' 'வாங்குங் கவளத்து' என்பன காண்க. இன்:சரியை

(14)

 15. கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம் பிறங்கத்-தச்சன்
பினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட்
சினமால் பொருத களத்து.

(ப-ரை.) சினம் - கோபத்தையுடை, செங்கண்மால் - செங்கட்சோழன், பொருத களத்து - போர்செய்த களத்தில், எவாய்


1 . 'கைகடுணிக்க' என்றும்,
2 . 'திகழொளிய' என்றும் பாடம்.