22

பைந்தலை - கரிய தலைகள், புரள்பவை-புரளுவன, நன்கு எனைத்து உம் - மிகவும், பெண்ணை தோட்டம் - பனங்காட்டில், பெருவளி பெருங்காற்று, புக்கது அற்று- புக்க செயலை யொத்தன எ-று.

பசுமை - கருமைமேல் நின்றது. அம்:சாரியை புக்கதற்று என்பது புக்கற்று என்றாயது. பனந்தோட்டத்திற் பெருவளிபுக்கால் காய்கள் உதிர்ந்து புரளுமாறு போலத் தலைகள் புரண்டன என்க. 

(24)

25.  மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்
குஞ்சரம் பாயக் கொடி யெழுந்து பொங்குபு
வானத் துடைப்பன போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து.

(ப-ரை.) புனல் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், மேவாரை-பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மலை கலங்க - மலைகள் கலங்க, பாயும் - பாயா நின்ற, மலைபோல் - மலைகள்போல, நிலைகொள்ளா - நிலை கொண்டு, குஞ்சரம் பாய - யானைகள் பாய்தலால், கொடி - (அவற்றின் மிசை கட்டப்பெற்ற) கொடிகள், எழுந்து மேல் எழுந்து, பொங்குபு - விளங்கா நின்று, வானம் - வானத்தை, துடைப்பன போன்ற துடைப்பனவற்றை யொத்திருந்தன எ-று.

மலைகலங்கப் பாயுமலைபோல் என்றது இல்பொருளுவமம். கொடி துடைப்பன போன்ற என்க.

 (25)

26.  எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ்
செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன்
தெவ்வரை யட்ட களத்து.

(ப-ரை.) புனல் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை- பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்த்தில், எ வாய் உம் ஓடி - எவ்விடத்தும் சென்று வயவர் - வீரர்கள், துணித்திட்ட - துணித்த, கை - கைகளை, வாய்இல் - (தமது) வாயில், கொண்டு எழுந்த - கவ்விக்கொண்டு மேலெழுந்த, செம் செவி - சிவந்த செவிகளையுடைய, புல் சேவல் - புல்லிய பருந்தின் சேவல்கள். ஐ வாய் - ஐந்து வாயையுடைய, வயம் நாகம் - வலியையுடைய பாம்பை, கவ்வி - கவ்விக்கொண்டு, விசும்பு இவரும் -