24

உடை - பெருமையையுடைய, வாளார் - வாளேந்தினவராய், பிறங்கிய - போர் செய்த, ஞாட்பின்உள் - போரின் கண், கேடகத்தோடு அற்ற - கேடகத்தோடறுபட்ட, தட கை - நீண்ட கைகளை, கொண்டோடி - கொண்டுசென்று , இகலன் - ஓரிகள், வாய் துற்றிய - (தமது) வாயிற் கவ்விய, தோற்றம் - காட்சி, அயலார்க்கு - அயலில் நின்றவர்க்கு கண்ணாடி காண்பார் இல் - கண்ணாடி காண்பாரைப் போல தோன்றும் தோன்றாநிற்கும் எ - று.

பிறங்குதல் போர் செய்தலை யுணர்த்திற்று. அயலார்க்குத் தோன்றும் என்க. 

(28)

29.  கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபட்டு
வீற்றுவீற் றோடு மயிலினம்போல்-நாற்றிசையும்
கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட்
சினமால் பொருத களத்து.

(ப-ரை.) செங்கண்- சிவந்த கண்களையும், சினம்-வெகுளியையுமுடைய, மால்-செங்கட்சோழன், பொருத களத்து போர் செய்த களத்தில், கடிகாஇல்-மரங்கள் செறிந்த சோலையில், காற்று உற்று எறிய-காற்று மிக்கு எறிதலால், வெடிபட்டு-அஞ்சி, வீற்று வீற்று ஓடும்- வேறு வேறாக ஓடும், மயில் இனம் போல் -மயிலின் கூட்டம்போல், நால்திசைஉம் நான்கு திசையிலும், கேளிர் இழந்தார்- கொழுநரையிழந்த மகளிர், அலறுப: அலறாநிற்பர் எ-று.

வீறு-வேறு; 'சோறுடைக் கையர் வீற்று வீற் றியங்கும்' எனப் புறத்தில் வருவது காண்க. செங்கண்மால் என இயைத்துப் பெயராக்குதலும் ஆம். நாற்றிசையும் அலறுப என்க. அலறுப - பலர்பால் முற்று. 

(29)

30.  மடங்க வெறிந்து மலையுருட்டு நீர்போல்
தடங்கொண்ட வொண்குருதி கொல்களி றீர்க்கு
மடங்கா மறமொய்ம்பிற்1 செங்கட் சினமால்
அடங்காரை யட்ட களத்து.

(ப-ரை.) மடங்கா-மடங்குத லில்லாத, மறம் - மறத்தினையுடைய, மொய்ம்பு இன் - மார்பினையும், செம் கண் -சிவந்த கண்ணினையும், சினம் - கோபத்தையும் உடைய, மால் செங்கட்சோழன் அடங்காரை- பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்


1. ‘மடங்கன் மறமொய்ம்பின் ' என்றும் பாடம்.